எங்களைப் பற்றி |
அன்புடையீர்! எமது இந்த சென்னைநெட்வொர்க்.காம் (www.chennainetwork.com) இணைய தளம், 2001ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் நாள் துவங்கப்பட்டதாகும். இந்த இணையதளம் தான் நாங்கள் முதன்முதலில் தொடங்கிய தளமாகும். இந்தத் தளத்தை திரு. ப. கமலநாதன், அவர்களின் வழிகாட்டுதலின்படி, திரு. ப. செந்தில்நாதன் மற்றும் நான் (கோ. சந்திரசேகரன்) இணைந்து உருவாக்கினோம். பின்னர் சொந்த பணிகள் காரணமாக திரு. ப. செந்தில்நாதன் அவர்கள் இத்தள பணிகளில் இருந்து விலகியதால், நான் (கோ. சந்திரசேகரன்) மட்டும் இத்தளத்தையும் இதனுடன் இணைந்த பிற தளங்களையும் நிர்வகித்து வருகிறேன். ஆரம்பத்தில் சென்னை குறித்த தகவல்களை மட்டும் இத்தளத்தில் வெளியிட்டு வந்தேன். பின்னர் தமிழ் இலக்கிய நூல்களையும் மின்னூல் வடிவில் வெளியிட ஆரம்பித்தேன். பின்னர் 2006ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் நாள் முதல் சென்னை நெட்வொர்க் தளத்தில் வெளியிடப்பட்டு வந்த தமிழ் நூல்களை பிரித்து எடுத்து, எனது புதிய சென்னைநூலகம்.காம் (www.chennailibrary.com) தளத்தில் வெளியிட ஆரம்பித்தேன். 2009 ஆண்டு அக்டோபர் 1ஆம் நாள் முதல், சென்னைநெட்வொர்க்.காம் (www.chennainetwork.com) உள்ளிட்ட பிற இணைய தளங்கள், புதிதாக துவங்கப்பட்ட, எனது ‘கௌதம் இணைய சேவைகள்’ (Gowtham Web Services) நிறுவனத்தின் கீழ் செயல்படத் துவங்கின. 2024, நவம்பர் 3ஆம் நாள் முதல் எமது இந்த சென்னைநெட்வொர்க்.காம் இணையதளம் தகவல் இணையம் (Information Portal) ஆக மாற்றப்பட்டு, புதிய பொலிவுடன் செயல்படத் துவங்கியுள்ளது. இத்தளத்தில் பல்வேறு தலைப்பிலான தகவல்கள் வெளியிடப்பட உள்ளன. வாசகர்கள் எமது இந்த சென்னைநெட்வொர்க்.காம் இணையதளத்திற்கு தொடர்ந்து தங்களின் நல் ஆதரவை நல்குவீர்கள் என்று நம்புகிறேன். தங்கள் அன்புள்ள கோ.சந்திரசேகரன் |